Monday, 9 January 2012
Sunday, 29 August 2010
பெருநிலம்........
கனவுச் சாம்பல் படர்ந்த மனிதர்கள்
இறந்தபடியே திரிகிறார்கள்...
உயிரைத் தேடும் ஆர்வமின்றி
தேய்ந்த உடல்களை அலையவிட்டபடி
தினமும் அவர்கள் வாழ முனைகிறார்கள்...
இறந்தபடியே வாழ்வது இப்போ
அவர்களுக்கு வசதியாயிற்று..!
மீண்டும் உயிரைச் சுமக்கும் எண்ணமேதும்
இப்போதைக்கில்லை....
உயிர்கள் அவர்களுக்கு மிகவும் பாரமாயிற்று..
அவற்றின் காவுதல்கள் பெரும் அபாயமாயிற்று..!
அவை பற்றிப் பேசுவதும் விவாதிப்பதும் கூட
கடும் பயங்கரவாதமாயிற்று..!
மௌனத்தை இறுகப்பற்றியபடி
இறந்தபடியே நடப்பது வசதியாகப் போயிற்று...!
இறந்தபடியே வாழும் மனிதர்களின் இனப்பெருக்கம்
வரலாற்றைத் தொலைத்தபடி சிதறிச் செல்கிறது...
சிதைந்த கனவுகளும் நசிந்த நினைவுகளுமாய்
பாரெங்கும் பரவி நீள்கிறது!
மெல்லத் தலை நீட்டிப் பேச விரும்புவோரை..
அவ்வப்போது அமைதிப்படுத்தி மௌனம் போதிக்க
ஆயிரம் புத்தர்களும் பத்தாயிரம் புனிதர்களும்!
கனவுச் சாம்பலின் வாசனையில்
பேருலகம் களிப்பெய்துகிறது....
அழகிழந்த நகரங்கள் அவர்களின்
கேலிக் கவிதைகளாகின்றன...!
சாம்பல் மேடுகள் கவர்ச்சி மிக்க
கதைக் களங்களாகின்றன....!
பட்டிமன்றம் செய்வதற்கும்
பரிசில்கள் பெறுவதற்கும்
புதையுண்ட பெருநிலங்கள்
புனைக் களங்கள் ஆகின்றன...!
காலம் காலமாய் மௌனிகளாய் இருந்தவர்கள்
கானமிசைக்கப் புறப்பட்டு விட்டார்கள்!
வாழ்வும் வளமும் மிக்க பெருநிலமொன்று
வாயும் கண்ணும் இழந்து
சாவின் வலிகளைக் கயிறுகளாக்கி
இறந்தபடியே வாழும் மனிதர்களை
விழுந்து விடாமல் இழுத்துச் செல்கிறது...!
இந்து சமுத்திரத்தின் இரத்தப் புகாரில்
ஏராளம் பிணந்தின்னிகள் இன்னமும் நீச்சலடித்தபடி...!
நீச்சலின் வீச்சினைப் போற்றிப் பாடிட
நீள் வரிசையில் நிறை வித்தகர்கள்....!
பெருநிலத்தின் பேரும் புகழும்
புதை குழியுள் உரமாகும்...
வலு நிறைந்த வாழ்வுகள் அங்கு விதைகளாகும்...
வலிகளினாலான கயிறுகள் வடங்கள் ஆகும்...
நீச்சலடிப்புகளை நிறுத்தும் நங்கூரங்களுமாகும்..
பெருநிலம் மீண்டும் துளிர் விடும்.....!
-சந்திரா இரவீந்திரன்
(28-08-2010 ல் 'கீற்று' இணையத்தளத்தில் பதிவாகியது)
Thursday, 26 August 2010
இராவணன்
மணிரத்னம் படங்கள் எல்லாமே ஏதோ ஒரு அதிர்வை இரசிகர்கள் மத்தியில்
ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மை – 'இராவணணை'த் தவிர!
மௌனராகம், அக்கினி நட்சத்திரம், நாயகன், இதயத்தைத் திருடாதே, தளபதி, கன்னத்தில் முத்தமிட்டால், இருவர், குரு......என்று அவரின் இயக்கத்தில் உருவானவை அனைத்தும் இதில் அடங்குகின்றன.
புதிய தொழில் நுட்பத்தை, புதிய கமெராக் கோணங்களை, நவீன ஒளியமைப்பு, ஒலியமைப்பு என்று ஏகப்பட்ட விசயங்களில் புதுமைகளை தமிழ் சினிமாவில் புகுத்தி அதிரடித் தாக்கங்களை ஏற்படுத்தியவர். இதனால் மணிரத்னம் படங்களை ஒரு உயர் இரசிகத் தனத்துடன் எதிர்பார்த்துப் போகும் இரசிகர்களுக்கு 'இராவணன்' ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது என்று கூறலாம்!
உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால்....ஆகிய திரைப்படங்கள் ஈழத்து அரசியலுடன் இணைந்த கதையாக அமையப்பெற்றிருந்ததனால்....இத்திரைக் கதைகளில் மணிரத்னம் அவர்களின் பிழையான பார்வைகள் கரிய பெரும் கோடுகளாக ஈழத்தமிழ் இரசிகர்களை உறுத்திக் கொண்டிருந்தன என்பது மறுக்க முடியாதது! இது அந்தப் படங்களின் அற்புதமான பக்கங்களையும் இரசிக்க விடாமல் இரசிகர்களை இடையூறு செய்த வண்ணமிருந்தன. அதிலும் உயிரே திரைப்படம் பலரைக் கோபத்திற்கு ஆளாக்கியிருந்தது!
ஆனால் 'இராவணன்' அதற்கும் மேல் போய் கோபத்தையும் ஏமாற்றத்தையுமே ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். இந்தப் படத்திற்கு அவர் ' இராவணன்' என்ற பெயரையே சூட்டியிருக்கத் தேவையில்லை. இராவணனின் எந்த அடையாளங்களும் இங்கே காட்டப்பட்டிருக்கவில்லை. இந்தத் திரைப்படத்திற்கு'விக்ரம்' என்றோ அன்றேல் 'வீரா' என்றோ பெயர் சூட்டியிருந்திருக்கலாம். சரித்திர இராவணனின் குணவியல்புகள் எதுவுமே இங்கு வீரா பாத்திரத்தில் சரியாகக் காட்டப்படவில்லை. சரித்திர இராவணன் ஒரு சிவபக்தன் - ஆனால் இங்கு வீரா என்னும் பாத்திரம்?
சரித்திர இராவணன் இசையில் வல்லவன்- இசையென்றால் இராகங்கள் யாவும் அத்துபடியான இசைக் கலைஞன். . இன்னுமொரு கலைஞனுடன் போட்டியிடக்கூடிய வல்லமை மிக்கவன். சரித்திர இராவணனுக்கு ஏற்கனவே மனைவி மக்கள் இருந்தனர். சரித்திர இராவணன் தான் சிறை பிடித்த சீதையை அசோகவனம் என்னும் அசோக மரங்கள் நிறைந்த, பூக்கள் பூத்துக் குலுங்கும் ஒரு மலர் வனத்திலே தான் சிறை வைத்திருந்தான். சீதைக்கு எப்போதும் காயங்கள் ஏற்படும் வகையில் இராவணன் நடந்து கொண்டதில்லை.......இப்படியே அடையாளப்படுத்தப் படாதவை என்று இத்திரைப்படத்தில் ஆயிரம் இருக்கின்றன.
இத்தகைய திரைப்படத்திற்கு ' இராவணன்' என்ற பெயரை சூட்டியிருப்பது வேடிக்கையாக இருக்கிறதன்றி இரசிக்கக் கூடியதாக இருக்கவில்லை என்பதே என் எண்ணம்.
மணிரத்னம் அவர்களிடம் நாம் எதிர்பார்ப்பவற்றை அவர் இனிமேல் தராமலே விட்டு விடுவாரோ என்ற ஒரு ஐயப்பாடு மேலும் வலுக்கிறது!
–சந்திரா இரவீந்திரன்
Tuesday, 24 August 2010
நினைந்து..நினைந்து

அண்ணனா..தீட்சண்யனா..?
எனக்குள் என்றும் உயிர்ப்புடன்
கிளைவிடும் பெரு விருட்சம் போல..!
அவ்வப்போது ஆறுதலுக்காய் ..
அதன் கீழ் நான்..!
மெல்லிய தென்றலென வருடும் ..
குளிர்ந்த இலைகள்..
துயரைத் துடைக்கும் கிளைகள்..
காற்றில் மோதியெழும் இனிய நாதமென..
எப்பவும் ரீங்கரிக்கும் கவிதை வரிகள்..
அல்ல..அல்ல..நீ உதிர்த்த வார்த்தைகள்!
வரிகளிற்குள் அடக்கிவிட முடியா மலைப்பு!
பேசியவை சில தான்..
பேசாமல் பேசவைத்தவை பல!
கைபற்றி அழைத்து..இன்னுமோர் அறிவுலகுள்
என் கால் பதிய வைத்த உன் காருண்யம்..
என் நெஞ்சு கரைகிறது..!
மலைப்பும் மகிழ்வும் நெருடலுமாய்....
கரைந்து...நெகிழ்ந்து..நாம்!
நீ மட்டும் கவிதை வரிகளிற்குள் ..
எப்பவும் அடங்கி விடாமல்..!!
- சந்திரா. இரவீந்திரன்
.
Monday, 14 December 2009
காற்று – சிறுகதை
கனவுகள் இனிமையாக இருந்தன. மேகப் பொதிகளுனூடாய், பசும் புற்களின் மேலாய், வியர்வையின் வாடையற்ற வாசனைத் தரைகளின் வணணப்பூச்சுகளினிடையாய், சொர்க்கத்தின் கூரையைத் தொடுவதும் குதிப்பதுமாய் கனவுகள் மிதந்தன!
மாலைக் குளிரின் சிலிர்ப்பும், நிலத்தின் அடியிலிருந்து வீசும் வெயிலின் கடுப்பும் ஆறாமல் உடலை இரண்டு படுத்திப் கொண்டிருந்த போதும் கனவுகள் விரிந்து கொண்டேயிருந்தன!
நியாமியின் பகல் வெயிலும் இரவுக் குளிரும் ஒன்றிற்கொன்று ஒட்டாமல் மனிதர்களைத் தூக்கியடித்துக் கொண்டிருந்தது.
சற்று முன்னர்தான் மரங்களிலிருந்து தாவிக் குதித்து இறங்கி வந்தவர்கள் போல ஒவ்வொருவரின் தோற்றமும்! அந்தக் கிழட்டு விடுதியின் மொட்டை மாடியில் நின்று பார்ப்பது மிகவும் சுவாரஸ்யமாய் இருக்கும்.
அதற்காகவே காத்திருப்பது போல இரவு உணவருந்தும் நேரம் பார்த்து அவள் மொட்டை மாடிக்குப் போய் விடுவாள். சூரியன் மிகவும் ஆரவாரப்படாமல், சின்ன வட்டத்துக்குள் அடங்கி ஒளி முழுவதையும் பூமியில் பாய்ச்சிக்களைத்த தோரணையில் பவ்வியமாய் ஒதுங்கிப் போய் நிற்பான்! விழிகளை விரித்து விரித்துப் பார்த்தாலும் மணிகள் சுருங்காது!
வீதியில் கூக்குரல்கள் கேட்கும். இவள் முழங்கைகளை மாடியின் அரைச் சுவரில் ஊன்றியபடி நெடுநேரம் அப்படியே நிற்பாள்.
முன்னால் ஒரு பள்ளிவாசல்! எட்டு மணித் தொழுகை ஒலிபெருக்கியூடாய் அந்த நகரம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்.
அந்த நேரம் தொழுகைக்குச் செல்லாத பெண்கள் தான், அந்த வீதியில் அதிகமாய் திரிவார்கள்.
குழந்தைகளை முதுகில் சேர்த்துக் கட்டிவிட்டு எண்ணுக் கணக்கற்ற சுமைகளை தலையில் தாங்கிக் கொண்டு உடலை அதற்கேற்ப சமப்படுத்தி நடப்பதினால்தானோ, இந்தப் பெண்களின் பிருஷ்டம் இப்படி மலையென மிதந்து நிற்கின்றது!
ஒட்டகத்தின் சுட்ட இறைச்சியைத் தடிகளில் குத்தி இப்பவும் ஒருவன் விற்றுக் கொண்டு திரிகின்றான்.
கீழே சமையல் பகுதியில் தடல்புடலாய் சாப்பாட்டுப் பாத்திரங்கள் இடிபடும் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது.
'இந்த சிறிலங்கன்ஸ் வந்ததிலிருந்து ஒரே மிளகாய்த்தூள் கமறலும் பருப்புக் கறி வாசனையும் தான்'' என்று விடுதிக்காரக் கிழவன் கூறியது எத்தனை உண்மை. இரவு பாணும் பருப்புக்கறியுமாய் தான் இருக்கும்..! இன்றைக்கு கமலாக்காவினதும் அனுசியாவினதும் சமையல் முறை!
சாப்பிடக் குந்தும் இருபத்திமூன்று பேரும் அவர்களின் கறியைப் புகழ வேண்டும் என்ற ஆவலில் நன்றாகவே உள்ளி மிளகு குற்றிப் போடுகின்றார்கள் போலும்! வாசனை மூக்கைத் துளைத்தது.
சூரியன் முற்றிலும் காணாமல் போய் விட்டான். வளர்பிறை முகிலுக்குள் மறைந்து நின்றது. வீதிக்கம்பங்களிலிருந்து வரும் மஞ்சள் ஒளி, மொட்டை மாடியில் சில கட்டிடங்களின் நிழல்களை திட்டுத் திட்டாய் விழுத்தியிருந்தது. 'றஞ்சினி....'' என்ற கிசுகிசுப்பான குரல்! திடுக்குற்றாள். காற்று கூந்தலை அளைந்து கொண்டிருந்த போதும் உடல் முழுவதும் வியர்ப்பதான உணர்வு!
'என்ன இது?! காற்றோடுதான் அவர் குரல் வந்ததோ? அல்லது இதயத்தைப் பிரித்துக் கொண்டு வந்து சீண்டுகின்றதோ?''
கை கோர்த்த மூன்று மாதங்களில் அவனை விட்டு வெகுதூரம் போய்விட்டதிலிருந்து அடிக்கடி கேட்கும் காற்றுச் சீண்டல் இது! கணவர் பின்னால் நிற்கும் மாயத் தோற்றம்.
கைகளை விசுக்கி விசுக்கி நீண்ட பாதங்களை ஊன்றிப் பதித்து நிமிர்ந்து நடந்து வரும் மெல்லிய அதிர்வு. உதடுகளிடை மலரும் புன்னகை. கண்களுக்குள் ஓடி விளையாடும் குறும்பு. காற்றெல்லாம் ஒரே வாசனை வீசும்! அது அவரின் வாசனை! அவருக்கே உரிய வாசனை!
அவரின் ஷேட்டில், றவுசரில், சாரத்தில், துவாயில், தலையணையில், பிறிவ்கேசில், சப்பாத்தில், சீப்பில், கைக்குட்டையில், கடிதங்களில்.... எங்கெல்லாம் அவரின் உடமைகள் இருக்கின்றதோ அங்கெல்லாம்....! என்னைத் தொட்டபின் என்னிலும் சில கணங்கள்....! இப்போ என் நாசியில் நிரந்தரமாய்...!
எனக்குப் பைத்தியம், புருஷ பைத்தியம், என் ஆளுமையையே அபகரித்துக் கொண்டு போகின்ற அதிர்ச்சி! நொந்து நொந்து உருகிக் கொண்டே போகிற நோயாளி மாதிரி... வாழ்க்கையை கனவுகளாகவே களித்துக் கொண்டிருக்கிற பைத்தியம்...
அவளுக்குச் சிரிப்பு வந்தது. சுயபிதற்றலை எண்ணிச் சிரிப்பு வந்தது. 'றஞ்சனி அடி றஞ்சனி....'' உண்மையாகவே மொட்டை மாடித்தரை அதிர்கின்றது.
'பருப்புக்கறி முடியப் போகுது...பாண் ஒரு துண்டுதான் கிடக்குது. ஓடிப்போய் சாப்பிடு'' கமலாக்கா கத்திக் கொண்டு வந்தா. அவவிற்கு பின்னால் சாப்பிட்டு முடித்த பரிவாரங்கள்.
'றஞ்சனி அக்காவுக்கு... இனி லண்டனிலை இருந்து ஒரு phone call வந்தால் தான் ரொனிக் குடிச்ச மாதிரி இருக்கும். அதுக்குப் பிறகு தான் அவவுக்குப் பசி வரும்...''
'சும்மா இரடி அனு; உனக்கிந்த சோகம் ஒண்டும் இப்ப விளங்காது. சுவிஸ்க்குப் போன பிறகு கொண்ணன் பார்த்து வைச்சிருக்கிற பெடியனுக்கு தலையைக் குடுத்த பிறகுதான் உந்தக் கன்றாவிகள் விளங்கும்..'' சிரிப்பலைகளில் மொட்டை மாடி அதிர்ந்து கொண்டிருந்தது.
அவர்கள் உலரப் போட்ட உடைகளை அள்ளியெடுத்துக் கொண்டு படியிறங்கினார்கள்.
'வாடி சுவருக்கு மிண்டு குடுத்தது காணும்.... மனுசன் அங்கையிருந்து லட்சம் லட்சமாய் கட்டிப் போட்டுக் காத்துக் கொண்டு கிடக்கிறார்; நீ உதிலை வந்து நிண்டு நிண்டு, சாப்பிடாமல் குடிக்காமல் காய்ஞ்ச சுள்ளியாகவே போய்ச் சேரப் போகிறாய்...?''
'போங்கோ வாறன்...'' அவள் சற்றே தாமதித்தாள். இப்ப... உடனே கீழே போனால், பெடியங்கள் எல்லோரும் என்ரை முகத்தைத்தான் விண்ணாணமாய் பார்த்துக் கொண்டு நிப்பாங்கள். ஏதும் சொட்டைப் பகிடியும் விடுவான்கள்...''
பத்து நிமிடங்கள் கழித்து படியிறங்கினாள். சமையலறை இரண்டு பட்டுக் கிடந்தது. அடிச்சட்டியில் கொஞ்சம் பருப்புக்கறி! கமலாக்கா சொன்ன பாண் துண்டை தேடிப்பார்த்தும் அங்கு காணவில்லை! இவள் யோசித்துக் கொண்டு நின்றாள். மங்கை, கண்ணாடியை கழற்றி விட்டு வந்து நின்றா. முகம் வேறு மாதிரி இருந்தது.
'கழுதைகள்...., மூக்குப் புடைக்கச் சாப்பிட்டிட்டுக் கழுவாமலே போட்டுதுகள்'' நாறல் அர்ச்சினைகளோடு பாத்திரங்களை ஒழுங்கு படுத்திக் கழுவத் தொடங்கினா.
இவள்... தரையைக் கூட்டி அள்ளிக் கொண்டிருந்தாள்.
'றஞ்சினி...., கனநேரமாய் உம்மை இந்தப் பக்கம் காணேல்லை, சாப்பிட்டனீர் தானே?'' என்று சந்தேகமாய் கேட்டா.
'இல்லை... ஒரு பாண்துண்டு இருக்கெண்டு கமலாக்கா சொன்னா: ஆனால் காணேல்லை...'' அவள் கூறியவாறே தேநீர் ஊற்றத் தயாரானாள்.
'கடவுளே!... எந்தக் காய்ஞ்ச மூதேசி அதையும் விழுங்கிச்சோ?...''- மங்கை தனக்கேயுரிய தனித்துவப் பதங்களை ஊசிகளாய் வீசியெறிந்து கொண்டிருந்தா. அவவுக்கு ஜேர்மனியில் மாப்பிள்ளை, தாலிக்கு ஓடர் கொடுத்திட்டுக் காத்துக் கொண்டிருக்கிறார். சொந்தச் செலவில் அவரே கூப்பிடுகிறார்.
நியாமியில் நின்ற இந்தப் பதினெட்டு நாட்களும் போனில் கதைத்துக் கொண்டேயிருந்தா. இருபத்தெட்டு வயசியிலும் நாற்பது வயதுக் காரியின் பேச்சும் மிடுக்கும் அனுபவ அறிவும்! எல்லோரது கைகளையும் விரித்து விரித்து சாத்திரம் கூடப் பார்க்கிறா!
'றஞ்சினியின் கணவர் சொக்கத் தங்கம், இவள் லண்டனிலை கால் வைச்சதும் ஓகோ என்று உயரப் போகிறாள்...'' என்றும் சொன்னா. இவளுக்கு அப்பவும் சிரிப்பு வந்தது. 'லண்டனிலை கால் வைச்சதும் உடனை என்ன நடக்கப் போகுது எண்டது எனக்கெல்லோ தெரியும்....'
'நான் வரப்போகிறனென்டு இரண்டறை வீடொன்று ஒழுங்குபடுத்திப் போட்டாராம்...'
'நானமர்ந்து கவிதையெழுத ஒரு மேசையும் ஆனந்தமாய் சயனிக்க ஒரு Royal கட்டிலும், நீராட ஒரு மலர்த் தொட்டியும்... பிறகு, பின்னுக்கு ஒரு புல்லுப் பூங்காவும் பசியெடுக்கும் போதெல்லாம் ருசிருசியாய் சாப்பிட வகைவகையாய் உணவு வகைகளும், அப்புறம்... அழகழகான குளிருடைகளும்... என்று ஏகப்பட்ட ஏற்பாடுகளாம்....!'
'வந்திடு றஞ்சினி... கெதியா வந்திடு...'' என்கிற போது, மூச்சுக்காற்று, தொலைபேசியை நொருக்கிவிடும் போல் தவிக்கிறது!
'இராப்பகலாய் Over time செய்கிறாராம்! றஞ்சினி வந்த பிறகு ரெண்டு மாசம் வேலைக்குப் போகாமலிருக்க...'
அவள் தேநீரை உறுஞ்சிக் குடித்துக் கொண்டிருந்தாள். மங்கை எல்லாம் கழுவி வைத்து விட்டு படுக்கைக்கு இடம் பிடிக்க ஓடிவிட்டா. பத்துச் சதுர அடி அறையில், பன்னிரண்டு பெண்களுக்கிடையில் மூச்சு முட்டித் திணறாமல் படுக்க வேண்டுமென்றால் இந்த அவசர நித்திரை அவசியம் தான்!
ஆண்கள் Down stair Floor ல் உள்ள பெரிய அறையில் பாணும் பருப்புக் கறியும் கொடுத்த உசாரில் பெரிய சத்தமாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
நாளைக்கு யார் அனுப்பப்படுப் போகினம்...? நினைவுகளுடே கேள்விப் பொறியும் மின்னி மின்னிக் குறுக்கிட்டது!
அடுத்து வந்த மாலையிலும், வெப்பமும் குளிரும் கலந்து பிசைந்து கொண்டு தானிருந்தது. ஆனால் சூரியனின் அமைதியும் போதை நிலையும் அழகாயிருந்தது! இரவு வானில் நட்சத்திரங்கள் கொள்ளையாய் கண்சிமிட்டு மென்றே தோன்றியது. முகில்கள் வெண் பஞ்சாய் அள்ளுண்டு தவழ்ந்தன! இடையிடையே நீலவெளித்துளிகள் வேவு பார்த்துக் கொண்டு மறுபுறம் நகர்வதாய் பாவம் காட்டின!
அழகான நைல் நதியின் ஒரு துண்டு நியாமியின் பெருந்தெருவைக் கிழித்துக் கொண்டு கீழாக ஓடியது! பாலத்தின் கம்பிகளைப் பற்றியபடி எல்லோரும்! 'இதுவா... உலகப் புகழ் பெற்ற நைல்?...'' வெப்பம் தாளாமல் பொங்கி ஆவியாகி, இப்போ நன்றாக வற்றி... திட்டுத் திட்டாய் குளம் கட்டிக் கொண்டு நிற்கிறது!
சூரிய ஒளியின் செம்மை கலந்து காற்றின் அசைவில் அங்கங்கு பளீரிடுகிறது! கிழக்குத் தொலைவில் மட்டும் அகன்ற மஞ்சள் நீர்ப் பரப்பு பளபளப் போடு அசைந்து கொண்டிருந்தது!
ஆனாலும் சிறுவர்கள் பாலத்தை அண்டியிருந்த சேற்றையும் நீர்த்திட்டு களையும் பொருட்படுத்தாமல் கோவணத் துண்டுகளுடன் தாவிக் குதித்துக் கொண்டு திரிந்தார்கள்.
குமாரின் குரல் பின்னால் கேட்டது.
'பெனினை விட இது பரவாயில்லை...''
'ஐய்...யோ தண்ணீரே இல்லாத அந்த பெனின் காட்டில்... இன்னும் இரண்டு நாள் நிக்கிறதைவிட, இலங்கை ஆமிக்கு கிட்டப்போய் நிண்டு துணிஞ்சு கண்ணடிக்கலாம்...''
எல்லோரும் மங்கையைத் திரும்பிப் பார்த்தார்கள்.
'குஸ்குஸ் ஒரே குஷியாக இருக்கிறார். இரவைக்குக் குஸ்குஸ் தான்...போலை...'' அனுசியா மெதுவாய் கூறினாள். சிரிப்பிலைகளில் பாலக் கம்பிகள் அதிர்ந்தன.
'குமாருக்கு 'குஸ்குஸ்' பட்டம் வைச்சதைப் பற்றித் தெரிய வேணும், அவ்வளவுதான்! பிறகு பாணுமில்லை பருப்புக்கறியுமில்லை...''
'அவர் ஜேர்மனியில ஒரு வருஷம் இருந்த பிறகு திருப்பி அனுப்பிப் போட்டாங்களாம்! அந்த ஒரு வருஷமும்... அங்கையொரு ரெஸ்ரோறண்டில வேலை பார்த்தவர்; எண்டதுக்காக, பாணும் பருப்பும் வாங்கக் கடைக்கு அனுப்பினால் 'குஸ்குஸ்' ம் ரின் மீனும் வாங்கி வந்து சமைச்சுத் தள்ளுகிறார். நல்ல சத்துணவாம் ருசியாம் சாப்பிடட்டாம்...''
பழக்கமில்லாத உணவு என்றாலும் பலருக்கு பிடிக்கவில்லையென்றாலும் யாரும் முகம் சுளிக்க வில்லை.
ஜெகதீஸனின் கணிப்புப்படி குமார் அனுபவசாலி என்பதால் எல்லோருக்கும் அவர் தான் பொறுப்பு. பாணும் பருப்பும் வாங்கி வருவதற்கும் அவர்தான் பொறுப்பு. எல்லோரும் நல்ல ருசி என்றே சாப்பிட்டார்கள்!
திடுமென்று கருமுகில்கள், பஞ்சுப் பொதிகளை உருட்டித் தள்ளிவிட்டு நுழைகின்றன! சூரியன் எங்கோ தொலைந்துவிட்டான்! பாலக் கம்பிகளில் 'ணங்ணங்' என்ற ஓசையுடன் வேகமாகச் சில மழைத்துளிகள்!
கூதல் காற்றில் உரோமக் கணுக்கள் சிலிர்த்துக் கொண்டன! எல்லோரும் கைகளால் தலையைப் பொத்தியபடி!
இவள் மட்டும் இருளும் வெளியைத் துளைத்துக் கொண்டு, காற்றில் கண்களை அலைய வி;ட்டபடி!
'நைல் நதிக் கரையிலும் நானுந்தன் நினைவுடன்!
காற்றிலும் சேற்றிலும் நானுந்தன் கனவுடன்!
மழையிலும் குளிரிலும் நானுந்தன் அணைவுடன்!
கடும் வையிலிலும் கூட நானுந்தன் நிழலுடன்!'
நைல் நதிக்கரையிலும் கனவுகள் விரிந்தன! காற்றில் அலைந்தன! முகில்களைத் தொட்டழைந்து சூரியனைத் தேடி... விடை தெரியா வினாக்களைத் தொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் அவள் உணர்வுளைச் சுற்றின!
'சரி... நாங்கள் நடப்பம், மழை பெருக்கப் போகுது போலை கிடக்குது...'' கமலாக்கா சொல்ல எல்லோரும் விடுதி நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். அவர்களையறியாமலே சின்னச் சின்னச் சிநேக குழுக்களாய் நகர்ந்து கொண்டிருந்தார்கள்.
விடுதி வாசலில் அந்தச் சிறுமி! மூன்று நாட்களுக்கு முன் வந்த அதே சிறுமி! இவளுக்குத் தூக்கி வாரிப்போட்டது. சட்டென்று உணர்வுகளெல்லாம் ஒடுங்கிப் போய் நெஞ்சில் பாரமேறுகிற ஒரு தவிப்பு!
வழித்துத் துடைத்து வடித்தெடுத்த கருஞ்சிலை போல் சிறுமி நின்றான். தலையில் பாத்தி பாத்தியாய் வகிடு பிரித்து ஏராளம் பின்னல்கள்! பருத்திச் சட்டையும் சின்னப்பாவாடையும்; அணிந்திருந்தாள். தென்னம்பூவிதழ்களை உடைத்துக் கொண்டு கிளம்பும் சின்னக் குரும்பைகளின் மலர்ச்சி!
இவளைப் பார்த்து இலேசாகச் சிரித்தாள். மூன்று நாட்களின் முன் இவளோடு மூன்று வரிகள் பேசிய ஞாபகத்தின் சிரிப்பு அது.
சிரிப்பினூடே அந்தத்தினம் தான் இவளுக்கு ஞாபகம் வந்தது. அன்றைக்கு யாரோ ஒரு பெரிய புள்ளி அங்கு வந்திருந்தான். சரிகை உடைகளால் போர்த்து மூடிக் கொண்டு கைவிரல்கள் மின்ன, வெள்ளை நிற 'பென்ஸ்' இல் வந்திறங்கினான்.
அநேகமாகப் பூட்டியபடியே கிடக்கும் சில விஷேட அறைகளுள் ஒன்று, வந்தவனுக்காக அன்று திறக்கப்பட்டு ஆரவாரமான வரவேற்பு!
அவன் வந்ததிலிருந்து விடுதி முழுவதும் வாசனைத் தைலங்களின் நாற்றம்! சிலசமயம் தலை வலித்தது; சில சமயம் இதமாயும் இருந்தது.
கீழே சமையல் பகுதியில் தடல்புடலான சமையல்கள், சமையற்காரர்கள் அன்று சந்தோஷமான பம்பரங்களாய் நின்றார்கள். பசியைக் கிளறும் முட்டைப் பொரியல் வாசனையெல்லாம் வந்து வந்து வயிற்றை வதைத்தது! மாலை நேரம் இந்தச் சிறுமி வந்தாள்.
கையில் ஒரு புத்தகமும் இரண்டு கொப்பிகளும்! அங்குமிங்கும் அணில் பார்வை பார்த்து விட்டு அறைக்குள் மெதுவாய் நுழைந்தாள். அதற்கப்புறம் இரண்டு மணிநேரத்தின் பின்தான் வெளியில் வந்தாள். வரும்போது கையில் சொக்லேற் இருந்தது. வாசலைக் குறுக்கறுத்து இவள்தான் வந்து கொண்டிருந்தாள். சிரித்தாள். அவளும் சிரித்தாள்.
றஞ்சனியின்; கையிலிருந்த உலர்ந்த உடைகளுள் ஒன்று நழுவிக் கீழே விழுந்தது. சிறுமி குனிந்து பொறுக்கிக் கொடுத்தாள்.
'நீ ஸ்கூலுக்குப் போறனீயா?'' என்று றஞ்சினி நன்றிச் சிரிப்போடு கேட்டாள். அவளுக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் புரியவில்லை. ஆனாலும் தனக்குப் பன்னிரண்டு வயதென்றும் பாடசாலைக்குப் போகிறவளென்றும் ஏதோ விதமாய் தெரிவித்தாள். பிறகும் சிரித்தாள், அப்புறம் போய்விட்டாள்.
அன்றைக்கு அவள் போய் நீண்ட நேரமாகி விட்டபின்பும் றஞ்சினிக்கு நெஞ்செல்லாம் ஏனோ பாரமாக அழுத்திக் கொண்டிருந்தது. எல்லையற்ற எண்ணங்கள், படுக்கையிலும் உடலைப் புரட்டிப் புரட்டி விரட்டின! 'பன்ரெண்டு வயசில் எனக்கொரு தங்கச்சி இருக்கிறாள்; அவளுக்கு இப்பவும் வடிவாக கொலரை இழுத்துச் சரிப்படுத்தி சட்டை அணியத் தெரியாது. வறுத்த புளியங்கொட்டை சப்பிக்கொண்டு ஊஞ்சள் ஆடுவாள்.... றஞ்சனிக்கு அழவேணும் போலெல்லாம் இருந்தது. அன்றிரவு முழுவதும் இனம் புரியாத அவஸ்தையோடு ஊமையாக அழுது கொண்டிருந்தாள்!
விடிந்த பின்பு லண்டனிலிருந்து உயடட வந்தது. சொல்லும் போது இவளுக்குக் குரல் பதறியது. கண்களுக்குள் ஈரம் கசிந்தது!
'றஞ்சு! உதொண்டும் வெளிநாடுகளில் பெரிய விசயமில்லை! உதுக்கேன் நீர் கவலைப்படுகிறீர்? அதை மறவும். நாளைக்கு அனுப்புகிற ஆக்களிலை நீர் வாறதைப் பற்றி ஜெகதீசனைக் கேளும்...'' என்றார் அவர்.
இவள் நைலின் அழகை அவருக்கும் சொல்லியிருக்க வேணும் என்று நினைத்துக் கொண்டு படியேறினாள்.
இரவு ஜெகதீசன் வந்தார். உடை முழுவதும் சுதந்தத்தை அள்ளிச் சுமந்து கொண்டு வந்து நின்றார். 'ரை'யும் 'ஸூ'வும் கண்களைப் பறித்தன! ஏதோ ஒரு முக்கியமான தகவலாக இருக்க வேண்டும். எல்லோரும் ஒருவரை யொருவர் பார்த்தபடி நின்றார்கள்.
'நான் மேலதிகமாய் கேட்ட நாற்பதினாயிரம் றஞ்சனிக்கும் அனுசியாவுக்கும் மட்டும் தான் வந்து சேர்ந்திருக்கு. நாளைக்கு ரெண்டு பேரும் வெளிக்கிடுறீங்கள். எல்லாத்தையும் 'ரெடி' பண்ணுங்கோ''
அப்புறம் வாசநந ளவயச க்குப் போய்விட்டார். அவர் சாய்ந்து நின்ற தூணிலிருந்து தொடர்ந்து சுதந்தம் பரவிக் கொண்டிருந்தது.
மங்கை கத்தத் தொடங்கி விட்டா.
'அஞ்சு லட்சம் கொடுத்து கணக்கெல்லாம் முடிச்ச பிறகு தானே, வெளிக்கிட்டனாங்கள்; இப்ப அரை வழியிலை வைச்சு 'கொண்டு வா' எண்டு அறுக்கிறான் பாவி! அவனுக்கென்ன் கொள்ளுப்பிட்டியிலை கோடிக்கணக்காகச் செலவழிச்சு கோட்டை மாதிரி ஒண்டு கட்டிக் கொண்டிருக்கிறான். குளியலறைக்கு வைரக்கல் பதிக்கப் போறானாக்கும்; எங்களை வைச்சு வறுகிறான்...''
'சத்தம் போடாதையுங்கோ மங்கையக்கர எங்களுக்குள்ளேயே ஆரும் போய் அங்கை அண்டிவிட்டு விடுவினம். பிறகு நாங்கள் அரைவழியிலை அம்போதான்!' என்று குட்டிச் சகுந்தலா குசுகுசுத்தாள்! குட்டிச் சகுந்தலா, ஊரில் காதலனை விட்டு வருகிறாள்;. ஜேர்மனியில் தமையனுடன் போய் சேர்ந்த பிறகு, காதலனைக் கூப்பிடுவாளாம். கெதியில் போய் சேர்ந்து, கெதியா உழைத்து, கெதியா அவனைக் கூப்பிட வேணும் எண்ட தவிப்பு அவளுக்கு!
இரவு, படுக்கைக்குப் போகும் நேரம் பார்த்து குஸ்குஸ் வந்து குரல் கொடுத்தார்.
'றஞ்சினியையும் அனுஷியாவையும் கூட்டிக் கொண்டு வரச்சொல்லி, ஜெகதீசன் இப்ப போன் பண்ணினவர்; பயண விபரம் கதைக்க வேணுமாம்....''
அனுஷியா துள்ளிக் கொண்டு எழுந்தாள். றஞ்சினி இரவுடையை அவசரமாய் மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானாள்.
அரை மைல் தூரம் தெரு விளக்கினொளியில் நடந்து, நைல் நதிக்கரையிலிருக்கும் பளிங்கு விடுதிப் பக்கமாய் திரும்பி, பேரீச்சை மரங்களின் நிழல்களை மிதித்துக் கொண்டு சிவப்பு ரோஜாக்களின் மெல்லிய வாசனையை நுகர்ந்தவாறே படியேறிய போது கால்கள் கூசின! தரையில் முகம் பார்க்கலாம் போல் பிரமிப்பு! ஜெகதீசனின் அறைவாசலை நெருங்கியபோதே கதவு திறக்கப்பட்டது!
'வாங்கோ'' என்றார்.
'எப்படி இவருக்குத் தெரிந்தது; ஏதும் கமரா இருக்கோ?' உள்ளே இருபது இஞ்சி TV யில் கிரிக்கற் மட்ச்| போய்க் கொண்டிருந்தது. அறை முழுவதும் ஜெகதீசனின் வழமையான சுகந்தம். பெரிய Double Bed, பளபளக்கும் Head Board, பட்டு விரிப்புக்கள், சிவப்புக் கம்பளம், மெத்தென்ற மெத்தை போலும், பஞ்சுத் தலையணைகள்!
ஜெகதீசனின் கையில் World map போலும். இரவு உடையுடன் மெத்தைக்குள் புதைந்தபடி சாய்ந்தமர்ந்திருந்தார். அருகில் ஒரு சின்னப் பிங்கானில் சீஸ்பிஸ்கற்.
றஞ்சனியின் கண்களைப் பார்த்தவர் 'சாப்பிடுமன்'' என்றார்.
குமார் வெளியில் போய் இருந்து கொண்டார்.
'சரி... இப்பிடி இருங்கோ...'' என்றார். 'கட்டிலிலையோ...?' அனுஷியா இவளைப் பார்த்து விழித்தாள்.
'என்ன முழுசிறீங்கள்?... இருங்கோவன்...'' இருந்து விட்டார்கள். அஃப்பா... என்ன இதம்; இது தான் Royal Bed ஓ...?
ஜந்து இலட்சத்து நாற்பதினாயிரம் கொடுத்து ..... மல்லிகைப் பூ மணக்க, வேப்பங்காற்று வீச, நீட்டி நிமிர்ந்து படுத்த வீட்டு விறாந்தாவையும் விட்டு விட்டு நடுவழியில் வந்து நின்று பத்துச் சதுர அடி அறைக்குள் பன்னிரண்டுபேர் வியர்வை மணக்க, நெருக்கிப் படுக்கும் விடுதி அறையின் வெற்றுத்தரை ஒரு கணம் நினைவில் வந்தது?
"Now You are Friends....Tourist... ஆக லண்டனுக்குப் போறீங்கள் Hair style, உடுப்புகள் எல்லாம் அந்தமாதிரி எடுப்பாயிருக்க வேணும்... இதெல்லாம் லண்டன் வரைக்கும்தான்... லண்டனிலை கால் வைச்ச உடனே எல்லாம் இழந்த அகதி! அகதி மட்டும்தான்....''
ஜெகதீசன் சொல்லிக் கொண்டே போனார். அவரின் கண்கள் அடிக்கடி கதையை மேவி அவர்களுக்குள் ஊடுருவி மீண்டுகொண்டிருந்தன. அப்பப்போ நமுட்டுச் சிரிப்பொன்று சிரித்துக் கொண்டிருந்தார். அந்தச் சிரிப்பு எப்பவும் அவளுக்குப்; பிடிக்காமல் இருந்தது.
'பிழை விட்டால்... பிடிபட்டால் நான் பொறுப்பில்லை; பிறகு என்ரை பெயர் ஜெகதீசனும் இல்லை...''
அனுஷியா இவளைத் திரும்பிப் பார்த்தாள். கண்கள் கலங்கத் தயாராவது போலிருந்தது. றஞ்சனிக்குப் பயணப் பதற்றம், இ;ப்போ தான் மிகச் சரியாக ஆரம்பமானது! காற்றில் கணவரின் குரலைத் தேடினாள்!
விழிகளிற்குள் ஜெகதீசனின் நமுட்டுச் சிரிப்புத்தான் மீளவும் அகப்பட்டது! 'அவ்வளவுதான்... பாஸ் போட் வெளிக்கிடேக்கை தருவன்...'' அவர் படுக்கையால் இறங்கினார். இவர்கள் எழுந்தார்கள்.
'Wish you all the Best..''
ஜெகதீசன் நெருங்கி வந்து அவளின் கைகளை பற்றினார். நமுட்டுச் சிரிப்பு மிக அருகாய் வந்து இவள் கண்களுக்குள் நுழைந்தது! முதுகில் ஒரு கை இ;லசாய் படர்வதாய் உணருமுன், சட்டென்ற இழுப்பில், ஜெகதீசனின் சுகந்தம், மார்பெங்கும் நாற்றமாய் படிந்தது! மேலெழுந்த மூச்சுத் திணறலுடன் தேகத்தின் பாகமெங்கும் தீப்பொறிகள் சிதறின...! திகைத்தாள்; பிடுங்கி உதறிவிட்டு நதர்ந்தாள். றஞ்சினிக்குக் கண்களிற்குள் நீர் முட்டியது! 'சரி... கவனமாய் போய் எல்லாத்தையும் ரெடி பண்ணுங்கோ...''
மீண்டும் அதே நமுட்டுச் சிரிப்பு! அனுஷியாவுக்கு என்ன நடந்தது? பேயடித்தது போல் சிரித்துக் கொண்டு வெளியில் வந்தாள்..!
விடிந்தால் பயணம்! எல்லாம் தயார்.
எல்லோரினதும் தூக்கக் குறட்டைகளைத் தவிர இரவின் நிசப்தம் அழகாய் அபூர்வமாய் தோன்றியது!
அவளுக்கு நித்திரை வரவில்லை; மொட்டை மாடிக்கு ஓடினாள்!
நட்சத்திரங்கள் இவளுக்காகவே காத்திருப்பவை போல் கண் சிமிட்டிச் சிரித்தன! உச்சிக்கு வந்திருந்த பத்தாம் பிறை, நாடியில் கைவைத்து, பரிகசிப்பதும் சீண்டுவதுமாய் நகரும் முகிலோடு நளினம் செய்கிறது! கூதல் காற்று மெலிதாய் உடலைத் தழுவியது! கண்கள் காரணம் புரியாமல் பனித்தன! புண்ணாகிச் சுட்டதெல்லாம் தண்ணென்று ஆறுவதுபோல்! அகமும் புறமும் மெல்ல மெல்லக் குளிர்மையின் ஸ்பரிசம்!
'றஞ்சினி... றஞ்சு...'' காற்றோடு அவரின் குரல்...! நாசியைச் சீண்டும் வாசனை! அது அவரின் வாசனை...! அவருக்கேயுரிய வாசனை....!
---------------------
சந்திரா. இரவீந்திரன்.(லண்டன்)
(இச் சிறுகதை லண்டனிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த IBC Radio – அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வெளியீடான "புலம்" சஞ்சிகையின் 2000 ம் ஆண்டு இதழில் வெளியானது)
Sunday, 13 December 2009
நிலா…நீ …வானம் காற்று மழை…
,af;Fdh; Nrud; mth;fspd; ~nghf;fp\k;| jpiug;glk; NruDf;NfAhpa jdpj;Jtj;NjhL ,irahYk; fijahYk; ,ioe;J nkOfp cap&l;b cUthf;fg;gl;bUf;fpwJ.
glj;jpy; fjhehafd; fjhehafp kl;Lky;y….midj;Jj; Jizg;ghj;jpuq;fSk; fijapd; ,d;DnkhU fjhehafh;fs; NghyNt gilf;fg;glbUf;fpwhh;fs;. Nrudpd; mg;ghthf tUk; tp[aFkhh; jd; nkd;ikahd ebg;ghy; jd; fjhghj;jpuj;ij vq;Nf xU cauj;jpy; nfhz;L Ngha; xspu tpl;bUf;fpwhh;.
mth; kl;Lky;y Nrudpd; jk;gpahf tUk; ,isQd; $l jdf;Fhpa rpwpa fhl;rpg;gLj;jy;fspYk; neQ;rpy; gjpAk; ghj;jpukhf mike;J tpLfpwhh;.
gj;kgphpahTk; NruDk; re;jpj;Jg; goFk; fhl;rpfis tpl mth;fs; gphpe;j gpd; tajhfp tUk; gj;kgphpah jd; ebg;ghy; glj;jpd; ,Wjpg; gFjpia mg;gbNa jdjhf;fpf; nfhz;L neQ;rpy; epiyahfp tpLfpwhh;!
Nrud; gw;wp mjpfk; nrhy;y Ntz;LNkh vd;W Njhd;WfpwJ! Nrudpd; ,af;fj;jpYk; ebg;gpYk; cUthFk; jpiug;glq;fs; gw;wpr; nrhy;y thh;j;ijfs; mjpfk; ,y;iy…! ghh;f;f Ntz;Lk;…..,irNahL ,ioe;J….,jaj;jpy; gjpe;J tpLk; glk;.
el;G….fhjy;…md;G……,itnay;yhtw;wpw;Fk; Nkyhf …..,d;Dk; nrhy;yhj gy nra;jpfisf; $Wk; glk;…!
“epyh…! eP..thdk; fhw;W kio….vd; ftpij %r;R ,ir….!”
Tuesday, 12 August 2008
இடம்: புலம் பெயர் மண்ணிலுள்ள ஒரு கடவுள் ஸ்தலம்)கடவுளர்கள் அவரவர் அடையாளங்களைப் பிரதிபலிப்பதாகவும் அதே நேரம் மேலைத்தேய நவீன உடையமைப்புகளுடனும் காட்சியளிக்கிறார்கள்)
சிவன்:- (சடாமுடி, கங்கை, நாகம், புலித்தோல் ஜீன்ஸ்….நவீனரக சப்பாத்துடன் காட்சியளிக்கிறார்)
பார்வதி:- ( ஒரு நவீன அலங்காரத்துடன் நிற்கிறா)
சிவன்:- பார்வதி…..பார்வதி…..எங்கே உன் சின்னமகன் முருகனைக் காணவில்லை..? இங்கே அவனின் பக்தர்களெல்லாம் வெகு நேரமாக மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள்….அவன் அவர்களைக் கவனிக்காமல் அப்படியென்ன செய்துகொண்டிருக்கிறான்?
பார்வதி:- முருகன் computer ல் ஏதோ விளையாடிக்கொண்டிருக்கிறான்…கூப்பிட்டாலும் வருகிறானில்லை…..அவனுக்கு அதே வேலையாகப் போய்விட்டது!
கணபதி:- இல்லையம்மா…அவன் வள்ளி தெய்வானை என்ற இரண்டு பெண்களுடன் Internet Chatting செய்து கொண்டிருக்கிறானம்மா.
பார்வதி:- சிவ சிவா….
சிவன்:- நான் இங்கு தானிருக்கிறேன்….என்னை எதற்காக இப்போ அழைக்கிறாய்?
பார்வதி:- அவனைக் கூப்பிடுங்கள்….இப்படியே computer ம் Playstation ம் என்று அவனின் பொழுதுகள் போய்விடுகிறது….படிப்புமில்லை….பாட்டுமில்லை….பக்தர்களைக் கவனிப்பதுமில்லை…..
சிவன்:- கணபதி….நீ போய் உடனே அவனை இவ்விடம் வரச்சொல்லி விடு.
(கணபதி….முருகனை அழைத்தவாறே செல்ல முருகன் வருகிறார்)
முருகன்:- என்னப்பா? என்னை அழைத்தீர்களா?
சிவன்:- முருகா! நீ இப்படியே நாளும் பொழுதும் விளையாட்டுடன் இருந்தால்..உன் பக்தர்களை யார் கவனிப்பது? இதற்காகவா நாமெல்லாம் சொந்த மண்ணைவிட்டு இங்கு வாழும் எங்கள் மக்களைக் காக்கவும் அருள் புரியவும் வந்தோம்? அங்கே பார்..! எத்தனை பக்தர்கள் உனக்கு அபிஷேகம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் காத்திருக்கிறார்கள்?
முருகன்:- அப்பா! இங்கிருக்கும் பக்தர்களெல்லாம் ஒரேவிதமான பிரச்சனையைத்தான் என்னிடம் எப்பவும் முறையிடுகிறார்கள்! அதைக் கேட்டுக் கேட்டு எனக்கு ஒரே boring ஆக இருக்கிறதப்பா!
பார்வதி:- அப்படியென்னப்பா ஒரே விதமான பிரச்சனை?
முருகன்:- அம்மா! சொந்தமாக வீடு வாங்கியிருப்பவர்கள்…. mortgage கட்டுவதற்குக் கஸ்டமாக இருப்பதாகவும் அதற்கு ஒரு வழி கிடைக்க அருள் செய்யுமாறும் கேட்கிறார்கள். சொந்த வீடு அல்லாதவர்கள்…..ஒரு three bedroom வீடாவது வாங்குவதற்கு அருள் புரியுமாறு கேட்கிறார்கள். பழைய range ல் car வைத்திருப்பவர்கள் ஒரு புது range ல் car வாங்க அருள் புரிய வேண்டுமென்று கேட்கிறார்கள். Car ஏ இல்லாமல் நடந்து திரிகிறவர்கள் ஒரு நெளிந்த Car என்றாலும் பரவாயில்லை…வாங்குவதற்கு அருள் புரியவேண்டுமென்று கேட்கிறார்கள்…..குழந்தைகளெல்லாம் வந்து இரண்டு தேவாரங்களைப் பாடி..என்னைப் பரவசப்படுத்திவிட்டு Computer, playstation, mobile phone, Football T-Shirt…..இப்படியான பொருட்கள் தமக்குக் gift ஆகக் கிடைக்க அருள் புரிய வேண்டும் என்று வரம் கேட்கிறார்கள். யாருமே இது வரை நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு வரவேண்டுமென்றோ….அல்லது எனக்குப் பிடித்த மொழியான தமிழ் மொழியில் நல்ல புலமையும் தேர்ச்சியும் பெற்று அதை புலம் பெயர்ந்து வந்திருக்கும் இந்த மண்ணிலும் பரப்ப அருள் புரிய வேண்டுமென்றோ ஒரு நாளும் என்னிடம் கேட்கவில்லை! இந்த நிலையில் எனக்கு சலிப்பு வராமல் என்னம்மா செய்யும்??
பார்வதி:- சரி….சரி…நீ இன்னும் சாப்பிடவில்லை. அங்கே நல்ல பிரசாதங்கள் வடை கடலை பொங்கல் மற்றும் அறுசுவையுண்டி பஞ்சாமிர்தம் …என்று அமோகமான படையல் வைத்திருக்கிறார்கள்…முதலில் போய்ச் சாப்பிடு. அதன் பின்னர் ஆறுதலாக நாம் இதுபற்றி ஆலோசிக்கலாம்.
முருகன்:- அம்மா…..இந்த பஞ்சாமிர்தத்தை எத்தனை நாட்களிற்குத் தான் சாப்பிடுவது? இவையெல்லாம் tin-fruit இல் செய்யப்பட்டது! அது போலவே இவர்கள் சமைக்கும் மரக்கறிகளெல்லாம்…அரைவாசிக்கு மேல் packet ல் அடைத்து பல மாதங்களாக fridge ல் பாதுகாக்கப்பட்டது! ஏன் அபிஷேகத்திற்கான பசுப்பால் கூட எத்தனை நாட்களாக fridge ல் வைக்கப்பட்டிருந்தது தெரியுமா? என் மேல் அதனை அவர்கள் ஊற்றும் போது அப்பப்பா உயிர் போய் வருகிறது…அத்தனை குளிராக இருக்கும்! இதையெல்லாம் எத்தனை நாட்களிற்குத் தான் நான் சகித்துக் கொள்ள முடியும்??
பார்வதி:- சரி…இப்போதைக்கு போய் சாப்பிடு…நான் அப்பாவுடன் யோசித்து இதற்கு ஒரு வழி சொல்கிறேன்.
முருகன்:- நான் சாப்பிடமாட்டேனம்மா! எனக்கு இவற்றைச் சாப்பிட்டு நாக்கெல்லாம் மரத்து விட்டதம்மா….எனக்கு ஏதாவது pizza அல்லது noodles செய்து தாருங்கள்
….
பார்வதி:- pizza வுக்கு நானிப்போ எங்கேயடா போவேன்? எங்காவது order பண்ணித்தான் எடுக்க வேண்டும்….(யோசிக்கிறார்)
கணபதி:- அம்மா என் mobile phone ல் ஒரு super pizza கடை number இருக்கிறது. நான் எடுத்துத் தருகிறேன். வேண்டுமானால் order பண்ணுங்கள்.
சிவன்:- முருகா….உன்னை நான் இந்த Europe நாட்டிற்குக் கூட்டி வந்ததே பிழையாகப் போய்விட்டதோ என்று இப்போ வருத்தப்படு கிறேன்…
முருகன்:- ஏனப்பா?
சிவன்:- பின்னயென்ன? மக்கள் தான், மண்ணை மறந்து…ஏதேதோ காரியங்களிலெல்லாம் ஈடுபடுகிறார்களென்றால் ….எங்கள் பிள்ளைகளுமா…?
கணபதி:- அப்பா…தம்பி சொல்வதிலும் ஆசைப்படுவதிலும் கூட நியாயம் இருப்பதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.
பார்வதி: (சற்று அதட்டலாக) கணபதி! தம்பி தான் குழந்தைத் தனத்தில் ஏதேதோ கதைக்கிறான் என்றால் நீயுமா இப்பிடி எதிர் வாதம் செய்வது? நாங்கள் உலகின் எந்தப்பாகத்திற்குப் போனாலும் எங்கள் ஒழுக்கங்களையும் பண்புகளையும் இயற்கையுடன் இணைந்த அந்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைகளையும் மாற்றி விடக்கூடாது மகனே….
கணபதி:- அம்மா…நாங்கள் எப்பவும் நாகரீகம் தெரியாதவர்களாக இருக்கக் கூடாது. இது computer யுகம் அம்மா……நாங்களும் கொஞ்சமாவது அதற்கேற்ப எங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்…இல்லையென்றால் பக்தர்களே எம்மைப் பார்த்து பரிகாசம் செய்வார்கள்!
முருகன்:- நன்றாகச் சொல்லுங்களண்ணா. அம்மாவும் அப்பாவும் இப்பவும் சிந்துவெளி நாகரித்தில் இருக்கிறார்கள்….
சிவன்:- பார்வதி….இவர்களுடன் கதைத்து பிரயோசனம் எதுவுமில்லை…..இவர்களாக உணரும் காலம் வரும் போது தாமாகவே உணர்ந்து கொள்வார்கள்….
(நாரதர் வருகிறார்)
நாரதர்:- ஓம்.. நமசிவாய..…ஓம்நமசிவாய….ஈஸ்வரா!…..மூவுலகங்களிற்கும் மூத்த பரமனே! முக்கண் முதல்வனே! நடராசப் பெருமானே! ஆணும் பெண்ணும் சரிபாதி என்றுணரச் செய்த சிவசக்திப் பெருமானே! ஆதியும் அந்தமும் நீயே!…அரும் பெரும் சோதி நீயே!…முழுமுதற் கடவுள் நீயே! (அவர் தொடர்ந்து ஈசனைப் போற்றிப் பேசியபடியே இருக்க…)
முருகன்::- என்ன? நாரதர் மூச்சு விடாமல் புழுகித் தட்டிக்கொண்டு வருகிறார்….ஏதோ அலுவல் போலும். நாக்குச் சுழுக்கி விடப்போகிறது, நிப்பாட்டுங்கள் நாரதரே!
பார்வதி:- (அதட்டலுடன்) முருகா! வாயை மூடு! பெரியவர்கள் வீட்டிற்கு வரும் போது இப்படியா வரவேற்பது?
நாரதர்:- (சிரித்தவாறே) பரவாயில்லை…அவனைத் திட்டாதீர்கள் தாயே! வாழும் நாடு அப்படி! அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். முருகனைக் குற்றம் சொல்லிப் பயனில்லை. பெரியவர்கள் நாங்கள் அவர்களையும் கூட்டிக் கொண்டு இந்த நாட்டுக்கு இடம் பெயர்ந்து வந்தோமல்லவா…எங்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.
பார்வதி:- நன்றாகச் சொன்னீர்கள் நாரதரே! குழப்படி செய்யும் போது பேசித்திருத்தவும் முடியவில்லை,அடி கொடுத்துத் திருத்தவும் முடியவில்லை. சும்மா சாடையாக தட்டினால் கூட…முகத்தை நீட்டிக்கொண்டு அழுகிறான்…மிஞ்சினால் எல்லாவற்றையும் விட்டுவிட்L Social Service ல் போய் முiwயிட்டுக் கொண்டு அங்கேயே தங்கிவிடுவேனென்று எங்களையே பயமுறுத்துகிறான்…..நிலைமை இப்படியிருக்கிறது பாருங்கள்…!
நாரதர்:- (சிரித்தவாறே) இவற்றை நினைத்து மனவருத்தப்பட வேண்டிய நேரத்தில்….அப்பன் ஈசனோ…வெகு அழகாகச் சிரித்துக் கொண்டிருக்கிறாரே…!
பார்வதி:- ம்..அவருக்கென்ன …நேரத்துக்கு நேரம் நான் எல்லாப் பணிவிடைகளும் செய்ய ராஜா போல வாழ்கிறார். நீங்களாவது கேளுங்கள் நாரதரே! அவருக்கு நான் பிள்ளைகளின் பிரச்சனைகளைச் சொன்னால்….நான் தான் செல்லம் கொடுத்து இவர்களை இப்படியாக்கி வைத்திருக்கிறேன் என்று என் மீது குற்றம் சொல்லிச் சமாளிப்பாரே தவிர பிரச்சனையை எவ்வாறு தீர்க்கலாம் என்று ஒரு முயற்சியும் எடுப்பதில்லை! அவரின் உலகம் வேறு என்பது போல அவர் ஜாலியாகத் திரிகிறார்!
நாரதர்:- என்ன தாயே! நீங்கள் ஒருவர் தான் ஈசனை இப்படித் திட்டுகிறீர்களே தவிர…..அங்கே பக்தர்களெல்லாம் ஈசனடி போற்றி…எந்தையடி போற்றி…என்று உருகியுருகி பாடிப்பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்…..
பார்வதி:- (கேலியாக) ம்…ம்…நன்றாகப் பரவசப் படட்டும்….அவரின் திருவிளையாடல்கள் எல்லாம் அவர்களுக்கெங்கே புரியப்போகிறது?
சிவன்:- பார்த்தீரா நாரதரே! நான் சிவனேயென்று என்பாட்டில் இருந்தாலும் இந்தப் பார்வதி என்னை விட்டு வைக்கிறாளா என்று நீரே பாரும்…நான் என்னதான் செய்வது?
பார்வதி:- இல்லை நாரதரே…நீங்கள் வந்த இடத்தில் நான் என் பிரச்சனையை சொல்லித்தான் ஆகவேண்டும்……
நாரதர்:- சிவ சிவா…என் தலை போய்விடாதபடி..சொல்லுங்கள் தாயே..!
பார்வதி:- போன கிழமை…..இவர் குடியிருக்கும் கோயில் தலத்தில்….பக்தர்கள் குழுமியிருக்க….பூசை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது….இவர் அங்கு நிற்காமல் சுற்றப்போய்விட்டார்….பக்தர்களுக்கெல்லாம் இது எங்கே தெரியப்போகிறது?... கணபதி தான் ஓடிவந்து என்னிடம் வெளியில் சென்ற அப்பா இன்னும் இருப்பிடம் திரும்பவில்லை என்ற விசயத்தை என்னிடம் முறையிட்டான். அதன் பின்னர் தான்> நான் முருகனை அனுப்பி எல்லா இடமும் தேடவிட்டேன். ( விம்மியழுதவாறே) அந்நேரம் அவர் எங்கே நின்றார் தெரியுமா….ஊர்க்கோடியிலுள்ள ஒரு Pub ல் நின்று பெண்களி;ன் கபரே நடனம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறார். இதனை முருகன் வந்து என்னிடம் சொல்லும் போது எனக்கு செத்துவிடலாம் போல இருந்தது! அவரே இப்படியெல்லாம் செய்யும் போது நான் பிள்ளைகளை எப்படித் திருத்த முடியும்??
நாரதர்:- சிவசிவா….சிவசிவா……
சிவன்:- நாரதரே…..பார்வதி சொல்கிறாளே என்று நீரும் விளங்காமல்…என்னை அப்படி அழைக்காதீர். நான் Pub ற்குச் சென்று நடனம் பார்ப்பதற்காகவா….இந்தச் சமுத்திரங்களெல்லாம் கடந்து இங்கு குடும்பத்துடன் வந்திருக்கிறேன்? நீர் இதை உண்மை என்று நம்புவீரா?
முருகன்:- அப்பா…பொய் சொல்கிறார்…..நான் என் கண்ணால் கண்டேன்….அப்பா pub ல் நின்று ரசித்து ரசித்து நடனம் பார்த்துக் கொண்டிருந்ததை என் கண்ணால் கண்டேன்…….
சிவன்:-- (கோபமாக) முருகா…..
பார்வதி:- அவனை ஏன் அதட்டுகிறீர்கள? பார்த்தீர்களா நாரதரே! பிள்ளைகள் என்னிடம் வந்து உண்மையைச் சொன்னால்…..இவர் பிள்ளைகள் மீது காரணமில்லாமல் பாய்ந்து விடுகிறார்….இவரின் கூத்துகள் எல்லாம் ஏற்கனவே உலகமறிந்த விடயம் தானே?
tpஷ்ணு:- வணக்கம் ஈஸ்வரா! வணக்கம் சக்தி தேவி!
சிவன்:- வணக்கம் விஷ்ணு! வா.ரும்... நல்ல சமயத்தில் வந்தீர்;….இந்தப் பார்வதியுடன் தினமும் ஒரே ரகளையாக இருக்கிறது….
விஷ்ணு:- அப்படியென்ன பிரச்சனை உங்களுக்கிடையில் இருக்கிறது?
கணபதி:- விஷ்ணு மாமா! நான் சொல்கிறேன். எல்லாப் பிரச்சனைகளுக்கும் காரணம் இந்த முருகன் தான்! இவனின் தொல்லை தாங்கமுடியவில்லை மாமா! அப்பாவை pub ல் கண்டதாக இவன் அம்மாவிடம் வந்து கோள்முடித்து வைத்திருக்கிறான்….அதனால் தான் அம்மாவுக்கும் அப்பாவுக்குமிடையில் தினமும் பிரச்சனை!
tpஷ்ணு:- (சிரித்தவாறே) சரி சரி எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. நீங்கள் இனி எதுவும் எனக்குச் சொல்லத் தேவையில்லை.
சிவன்:- விஷ்ணு! நான் அன்று pub ற்கு ஏன் போனேன் என்ற விடயம் எல்லாம் உமக்குத் தெரியும் தானே? நீராவது இந்தப் பார்வதிக்கு எடுத்துச் சொல்லும்…..கணவன் மனைவி பிரச்சனைகள் எல்லாம் இப்படித் தெருத்தெருவாய் நாறிப் போகிறமாதிரி இந்தப் பெண்கள் ஆக்கிவிடுகிறார்கள்…..என்ன செய்வது?
பார்வதி:- (கோபமாக) ஏன் பெண்களை இழுக்கிறீர்கள்? ஆண்கள் நீங்கள் செய்யும் கோமாளி வேலைகளையெல்லாம் சரியென்று நாங்கள் கைககட்டிப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா??
tpஷ்ணு:- அடடா?....இருவரும் சற்று நேரம் பொறுங்கள். (நாரதரைப் பார்த்து) நாரதரே! நீர் வந்த வேலை அமோகமாக நடக்கிறது என்று நினை;கிறேன்…..அப்படித்தானே?
நாரதர்:- சிவ சிவா……நான் எதுவும் அறியேன் மகாதேவா!...சுகம் விசாரிக்கலாம் என்று வந்தேன்…..அவ்வளவு தான்.
:- ம்….இப்படித்தான்….அன்று லக்ஷ்மியிடமும் என்னை தருணம் பார்த்து மாட்டி வைத்தீர்…….
நாரதர்:- சிவ…சிவா….அப்படியானால் நான் போய்விடட்டுமா மகாதேவா……
tpஷ்ணு:- இனியென்ன போவது? ஒரு வழி செய்து விட்டுத்தானே போகவேண்டும்…..சரி….சக்திதேவி……நீங்கள் சற்று அமைதியாக நான் சொல்வதைக் கேட்பீர்களா?
பார்வதி:- சரி கேட்கிறேன் சொல்லுங்கள்.....
tpஷ்ணு:- நாங்கள் வந்து குடியேறியிருக்கும் இந்த europe நாடுகளில் எங்கள் மக்கள் என்னென்ன சொறி வேலைகளெல்லாம் செய்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா?
பார்வதி:- எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள்….அங்கே கோயில்களைப் பாருங்கள்……எவ்வளவு பக்தர்கள் என்று......
….
tpஷ்ணு:- இதை மட்டும் வைத்து> எல்லோரையும் கணக்குப் போடுகிறீர்கள் நீங்கள். சற்று வெளியில் சென்று….நல்ல இடங்கள்> கூடாத இடங்கள் எல்லாவற்றிற்கும் போய் சுற்றிப் பாருங்கள்….அப்போ தான் எங்கள் இளசுகள் எல்லாம் என்னென்ன சுத்துமாத்துகள் செய்கிறார்கள் என்பது தெரியும்!
பார்வதி:- அப்படியென்ன செய்கிறார்கள்?
tpஷ்ணு:- அப்படிக் கேளுங்கள் தாயே! அந்தத் திருகுதாளங்கள் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் ஈஸ்வரன் அவர்கள் அதனைப் பார்த்து ஒரு முடிவு எடுப்பதற்காக நீங்கள் சொல்லும் அந்த pub ற்கும் ஒருநாள் போயிருந்தார்…அவர் நடனம் பார்ப்பதற்காகப் போவதென்றால்….ஏதாவது ஒரு பெரிய பொய்யாக உங்களுக்கெல்லாம் சொல்லிவிட்டுப் போகலாம் தானே? அவருக்குரிய ஒரு பிரதானமான அபிஷேக நேரமா அவர் போகவேண்டும்?
பார்வதி:- (யோசனையுடன்) ம்….அதுவும் சரிதான்.
வுஷ்ணு:- அவர் போனது….அங்கே எங்களை ஆத்மார்த்தமாக வழிபடும் பெற்றோருக்குப் பிறந்த சில தமிழ் இளைஞர்கள் மது அருந்திவிட்டு….ஒரு girl friend பிரச்சனைக்காக…..ஒருவரையொருவர் கத்தியால் வெட்டிக் குத்தி….சண்டைபிடித்துக் கொண்டிருந்ததை தடுத்து…அந்தப் பிள்ளைகளை அதிலிருந்து காப்பாற்றுவதற்காகத்தான்…..
கணபதி:- பார்த்தியா முருகா? உன் குரங்குப் புத்தியால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் எத்தனை மனஸ்தாபம் என்று பார்த்தியா?
பார்வதி:- சிவ சிவா….என்னை மன்னித்து விடுங்கள் சுவாமி!
சிவன்:- சரி …சரி உன்னை எத்தனை தரம் தான் மன்னித்து விட்டிருக்கிறேன். நான் காரணம் சொல்ல முயன்ற போதெல்லாம் போதும் உங்கள் புழுகெல்லாம் என்று எத்தனை தடவைகள் உன் காதுகளை மூடிக்கொண்டாய்….இப்போ விஷ்ணு சொன்ன போது தான் கேட்டாயாக்கும்…இனி ஒவ்வொரு தடவைகளும் நான் என் பிரச்சனைகளை விளங்க வைக்க விஷ்ணுவைத்தான் அழைக்க வேண்டுமோ…..
நாரதர்:- சரி ….அப்போ…நான் வரட்டுமா ஐயனே?
சிவன்:- வந்த வேலை முடிந்தது தானே போய்வா…..
நாரதர்:- (மேடையை விட்டுப் போனவாறே) சிவ சிவா….சம்போ மகாதேவா……
காட்சி – 2 _________________
(இடம்:- வீடு.) காட்சி:- ( மேசையில் cake வெட்டுவதற்கான ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிறது. சுவரில் பிறந்த நாள் அலங்காரங்கள் செய்யப்பட்டிருக்கிறது)
(பாத்திரங்கள்:- சிவன்>பார்வதி>கணபதி> முருகன்> விஷ்ணு> லக்சுமி>நாரதர்>….யாவரும் நிற்கிறார்கள்)
சிவன்:- பார்வதி….இன்னும் யார்யாரெல்லாம் வரவிருக்கிறார்கள்…..?
பார்வதி:- ம்…பிரம்மன் குடும்பம் இன்னும் வரவில்லை….நெருக்கமான உறவினர்களைத் தவிர வேறு யாருக்கும் நாம் சொல்லவில்லைத் தானே?
(அந்நேரம் வள்ளியும் தெய்வானையும் வருகிறார்கள். அவர்கள் நவீன உடையான tight skirt high-heels அணிந்திருக்கிறார்கள்)
தெய்வானை:- (நடந்து வந்தவாறே) Hi…..முருகா! எப்படி இருக்கீறீர்கள்? Happy Birthday To You!
முருகன்:- thank you! தெய்வானை.
வள்ளி:- Happy Birthday To You முருகா
!
முருகன்:- thanks வள்ளி.
நாரதர்:- கொஞ்சம் இருங்கள். (தெய்வானையைக் காட்டி) இவர் தெய்வானை…முருகனின் வருங்கால மனைவி. பெரியோர்கள் பார்த்து நிச்சயம் பண்ணியது! (பின்பு வள்ளியைக் காட்டி) இந்தப் பெண் யார்?
முருகன்:-நாரதரே!....இவள் just என் Girl Friend அவ்வளவு தான்.
நாரதர்:- ( முகத்தைச் சுளித்தபடி) சரி…சரி….பூலோகத்து மனிதர்கள் தான் என்னென்னவோ எல்லாம் செய்கிறார்கள் என்றால்…தேவலோகத்தவர்களுமா??
கணபதி:- (மூச்சிரைக்க ஓடி வருகிறார்) அம்மா…அம்மா…பிரம்மன் uncle ம் சரஸ்வதி aunty யும் வருகிறார்கள்….இனி முருகனின் birthday cake ஐ வெட்டலாம் அம்மா.
பார்வதி:- சரி….வெட்டுவதற்கு ஆயத்தப்டுத்துங்கள்.
(பிரம்மனும் சரஸ்வதியும் மேடைக்கு வருகிறார்கள்)
சிவன்:- பிரம்ம தேவனே வாருங்கள். எங்கே உங்கள் மனைவி…வீணையோடு வீட்டில் அமர்ந்து விடுவார்களோ என்று யோசித்தேன்…நல்லவேளை அவரும் வந்து விட்டார்
.
பிரம்மன்:- சரஸ்வதி இன்று party க்கு வராமல் தப்பமுடியவில்லை. ஏன் தெரியுமா? பார்வதி தேவி அவர்கள் phone ல் கையும் மெய்யுமாக பிடித்து,நிச்சயம் முருகனின் birthday party க்கு வரவேண்டும் என்று சொல்லி விட்டா….அதன் பிறகு அவள் எப்படி வராமல் இருக்கமுடியும்?
சரஸ்வதி:- (மெதுவாக புன்னகை செய்தவாறே) முருகனின் 21 வது பிறந்தநாள் அல்லவா? வராமல் இருந்தால் நன்றாக இருக்காதல்லவா?
பார்வதி:- மிக்க நன்றி எல்லோருக்கும். சரி…இனி நாங்கள் cake ஐ வெட்டலாம்.
…(அந்த நேரத்தில்….ஒளவைப் பாட்டியும்…..சில முனிவர்களும் வருகிறார்கள், எல்லோரும் cakeவெட்டுவதற்கு ஆயத்தமாகிறார்கள்)
ஒளவை:- சிவன், சக்தி,விஷ்ணு, லக்சுமி, பிரம்மன், சரஸ்வதி….கணபதி,முருகன்….இன்னும் நாரதர்….முனிவர்கள் எல்லாரும் ஒன்றுகூடி நிற்கும் இந்த அற்புதமான நேரத்தை நான் தவறவிடலாமா என்று எண்ணி….நானும் அழையாத விருந்தாளியாக இங்கு வந்திருக்கிறேன். என்னை ஆசிர்வதியுங்கள் சுவாமி! ( எல்லோரும் ஏக குரலில் வருக…வருக…ஒளவையே! _ என்று வரவேற்கிறார்கள்)
ஓளவை:- எம்பெருமான் முருகனின் அழகே அழகு ! இன்று அவனின் பிறந்த நாளன்று அவனை நான் வாழ்த்தி ஒரு பாடல் பாடவே முக்கியமாக இந்நேரம் வந்தேன்.
சிவன்:- சரி… cake ஐ முருகன் வெட்டட்டும்…அதன் பின் ஓளவைப்பாட்டி தன் பாடலைப் பாடட்டும்.
(அதன் பின் ஒளவைப் பாட்டி பாட ஆரம்பிக்கிறார்பட்டாசுகளுடன் Cake வெட்டப்படுகிறது. முருகன் எல்லோருக்கும் கேக் தீத்துகிறார்)
பாடல்:- பழம் நீயப்பா…..காய் நீயப்பா…… தமிழ் ஞானப் பூ நீயப்பா….. கடல் நீயப்பா….குளம் நீயப்பா…. எல்லாக் குட்டைகளும் நீதானப்பா…
(இடையில் கணபதி குறுக்கிடுகிறார்)
கணபதி:- நிறுத்துங்கள்….ஒளவைப்பாட்டியாரே..! அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை நீங்கள் எப்பவும் என் தம்பியைப் பற்றித்தான் அதிகமாகப் புகழ்ந்து பாடுகிறீர்கள்….என்னை> அவல் கடலை சுண்டல்..அரிசிக்கொழுக்கட்டையோடு மட்டும் நிறுத்திவிட்டீர்கள்….இன்று நீங்கள் என்னையும் போற்றிப் பாடவேண்டும். பாடுவீர்களா?
ஒளவை:- ஆனை முகத்தானே! தும்பிக்கையானே!...முருகனுக்கு மூத்தவனே! உன்னை நான் பாடாமலா !
(பாடல் ஆரம்பிக்கிறது)
ஒளவை:- “ குளிர் பாலும்…சீனியில் கரைத்த தேனும் பழைய பாகும் பருப்புமிவை நாலும் கலந்து freezer ல் வைத்தெடுத்து நான் தருவேன்! கோலம் செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ யெனக்கு இங்கிலீஸில் நாலுவார்த்தை பேசி மகிழ …..நல்லதொரு வரம் தா!”
(மேடையில் நிற்பவர்கள் அனைவரும் ரசித்து ஆரவாரப்பட்டுக் கைதட்டுகிறார்கள்)
சிவன்:- பிறகென்ன ஒளவைப் பாட்டியே ! உங்கள் கவிப்புலமையே புலமை! நீவிர் பெரும் பேறு பெற்று வாழ்வீர்! வாழ்க! வளமுடன்!
பார்வதி:- யாரோ வாசலில் வந்து நிற்பது போலத் தெரிகிறது. கணபதி…யாரென்று பார்.
கணபதி:- அம்மா…!.order பண்ணிய pizza வந்துவிட்டது.
சரஸ்வதி:- (மெதுவாக) எனக்கு mushroom ஒத்துக் கொள்ளாது….
கணபதி:- சரஸ்வதி aunty , எல்லா varieties pizza வும் வந்திருக்கிறது. பயப்படாதீர்கள். நீங்கள் choose பண்ணிச் சாப்பிடலாம்.
சிவன்:- o.k…. cheers எல்லோரும் சாப்பிட ஆயத்தமாகுங்கள்.
முற்றும்.
பிரதியாக்கம்:- சந்திரா.இரவீந்திரன்.
நெஞ்சை உருக்கும் உண்மை நிகழ்வு!
சுற்றமேயானாலும் அவன் முற்றத்தில் ஒரு கால் வைக்கும் முன் அவன் முகத்தில் சம்மதத்தை எதிர்பார்க்கும் நாகரீகம் உடையோர் நாம். எம் படலை தாண்டி, வாசற்படியேறி, எம் நெஞ்சின் மீது தன் சப்பாத்துக்கால்களை வைத்து எம்மைக் கேள்வி பல கேட்க, இந்த சிங்கள இராணுவக் காடையர் கூட்டம் எப்போது யாரிடம் பெற்றது அனுமதியை? ஏங்கு கற்றன இந்த உயர் பண்பை? யார் புகட்டினார் இந்த நாகரீகத்தை? நாம் அடங்கி அமுங்கிப்போன அந்தக் காலங்களில் எம்முடன் அடங்கிப் போன இரத்தமும் சதையும் உணர்வுமான கதைகள் ஆயிரம் ஆயிரம்!
அந்த ஆயிரத்தில் இதுவும் ஒன்று. இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் எனப்படும் பிரதேசத்தில் இடம்பெற்ற உண்மைகள் இவை.
ஆயிரம் அரைகுறை சமாதானம் வந்தென்ன ஆறுமா எம் ஆன்மாக்கள்? ஆழ அல்லவோ புதைந்து விட்டது அவனது கொலைவெறி பிடித்த பார்வை! அந்தப் பிசாசுகளின் கொலை வெறியை நேரில் கண்ட பதினொரு வயதுப்பெண்ணின் கதையிது!
அவளிடமிருந்து அந்த உண்மைகளைக் கேட்டறிந்தவர் - கதைவிளம்பி, ஈழம். தொகுத்து தருபவர்:- சந்திரா. ரவீந்திரன்.)
எங்கட அப்பா…..!
எங்கட அப்பா மூதூர் ~டவுனிலை ஒரு சின்னப் பல சரக்குக் கடை வைத்திருந்தவர். அதிலிருந்து வந்த வருமானம் எங்கட குடும்பத் தேவைகளுக்குப் போதுமானதாக இருந்தது.
என்ரை பெயர் வனிதா. ஏங்கட குடும்பத்தில மொத்தம் அஞ்சு பேர். அப்ப எனக்கு பதினொரு வயது.
வீட்டிலிருந்து அரை மைலுக்கு அங்கால தான் அப்பாட கடை இருந்தது. அப்ப ஒரு நாள், நிறைய ஆமி வந்து ~டவுனை ரவுண்டப் பண்ணி ஆக்களை வெளிய விடாமல் மறிச்சிட்டாங்கள். அதில தான் எங்கட அப்பாவும் பிடிபட்டவர்.
நாங்கள் அப்பாவுக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு கடைக்குப் போனம். அப்ப ஒரு ஆள் ஓடிவந்து சொன்னார் ~~ உங்கட அப்பாவை ஆமி பிடிச்சுக் கொண்டு ஜிபி.எஸ் ~காம்ப் பக்கமாகக் ( இது ஆமியின் கட்டைபறிச்சான் முகாம்) கொண்டு போறாங்க என்று. எங்கட அப்பாவோட இன்னும் ஏழு பேரைப் பிடிச்சிருந்தாங்களாம்.
நாங்கள் ஓடிப்போய் விசயத்தை அம்மாவிட்டைச் சொல்லி, அம்மாவோடை சேர்ந்து ~கேம்ப் பிற்கு ஓடிப்போய் வாசல்லை நிண்டு கத்தினம்! ஆமி வந்து அம்மாக்குப் பேசினான். ~~உங்கட அப்பாவை நாங்க பிடிக்கேல்லை..போங்க போங்க.. என்று எங்களை விரட்டினான். நாங்கள் போகேல்லை. ~கேம்ப் பின் பக்கத்து வளவில் போய் அதில இருந்து ~கேம்ப் பின் பக்கத்தையே பார்த்தபடி நிண்டம்.
அந்த நேரம் கொஞ்சப்பேரை அடிச்சு இழுத்துக் கொண்டு ஆமிக்காரர் வெளியில வந்தாங்க. அதில எங்கட அப்பாவும் இருந்தவர். நாங்கள் அவரைக் கண்டனாங்க. அவருக்கு கையெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது!
சாரம் கழண்டு விழ அதைக் கட்டிக்கொள்ள ஏலாமல் அப்பா போய்க்கொண்டிருந்ததைப் பார்த்திட்டு, ~~ அந்தா…அப்பா….அப்பா… எண்டு கத்தினம்! பிறகு என்ன செய்யிறதெண்டு யோசிச்சுப் போட்டு, வீட்டில போய் தங்கியிருந்திட்டு பின்னேரம் திரும்பவும் அங்க போனம். அப்ப ஆமிக்காரன், எங்களை விட்டிட்டு அம்மா மட்டும் உள்ளை வந்தாத்தான் அப்பாவை வெளிய விடுவம் என்று அதட்டினான்!
நாங்கள் அம்மாவை உள்ள போய் அப்பாவைக் கூட்டி வரும்படி ~~போம்மா…போம்மா.. என்று அம்மாவைத் தள்ளினம்! அம்மா ஒரு மாதிரி யோசித்துக் கொண்டு ~~ அங்கெல்லாம் நாங்கள் போகக்கூடாது எண்டு சொன்னா. நாங்க விடேல்லை ~~ போம்மா….போம்மா….. எண்டு அம்மாவுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தம். அப்ப…வந்த ஆமிக்காரன் ஒருத்தன் கண்ணெல்லாம் ஒரு சாதியாய் முழிச்சு அம்மாவைப் பாத்து ~~ ஏ..வாடி ! உள்ள போடி… என்று கத்திப் பேசினான். அதுக்கு அம்மா ~~இல்லை…நான் பெரிய சேர் வாற வரைக்கும் நிண்டிட்டுத்தான் போவன் எண்டு சொல்ல, அவன் உடன தன்ரை சப்பாத்துக் காலால எட்டி அம்மாட நெஞ்சில உதைய அம்மா போய் விழுந்திட்டா. நாங்க ஓடிப்போய் அம்மா…அம்மா.. எண்டு அம்மாவைப் பிடிச்சி அழுதம்! கடைசியாக அம்மா எங்களைக் கூட்டிக்கொண்டு வீட்ட வந்திட்டா.
பிறகு…ஒவ்வொருநாளும் ~கேம்ப் பில போய் அழுறது தான் எங்கட வேலையாக இருந்தது. ஆமிக்காரர் ஒவ்வொரு தடவையும் ~~ இந்தா அப்பாவைக் காட்டுறம்….பின்னேரம் வாங்க…நாளைக்கு வாங்க… எண்டு சொல்லி எங்களை ஏமாத்தினாங்களே தவிர கடைசி வரையும் அப்பாவைக் காட்டேல்ல!
ஒரு நாள், ஒரு முஸ்லீம் ஆள் வந்து சொன்னான் ~~ அக்கா இனி நீங்க உங்க புருஷனைத் தேடி ~கேம்ப் பக்கம் வரவேணாம். ஏனெண்டா உங்கட புருஷனை சாக்கில கட்டி, புளியடிப்பக்கம் கொண்டு போட்டாங்க எண்டு.
நாங்க எல்லாம் கத்தி அழுது கொண்டு புளியடிக்கு ஓடினம். அந்தப் புளியடி, ஜிபி.எஸ் ~கேம்ப்க்கு முன்னால இருக்கு. அது தான் ஆமிக்காரர், ஆக்களை ரயர் போட்டு எரிக்கிற இடம்! அங்க நாங்க போனம்.
~~ அம்மா….! சாக்கோட உருண்டு உருண்டு உருண்டு….கத்திக் கேட்குது! சாக்கோட சேத்து நெருப்பு வச்சிட்டாங்க! ~~ ஐயோ…ஐயோ…. எண்டு பெரிய சத்தமாய் கத்துறது கேட்குது! எல்லாச் சாக்கும் நெருப்பு எரிய எரிய அங்கையும் இங்கையும் உருளுது…துடிக்குது! நாங்க இங்க இருந்து கொண்டு ~~அப்பா….அப்பா…அப்பா… எண்டு கத்திக்கொண்டேயிருந்தம்!! சாக்கு எரிஞ்சு கொண்டு போகும்போது அப்பாட சாரத்தைக் கண்டனாங்கள்! நாங்க இன்னும் பெரிசா கத்தினம்! எங்கட அப்பா தான் எரியிறார் எண்டு எங்களுக்கு தெரிஞச்சிட்டுது! எங்கட அப்பாவோட இன்னும் ரெண்டு பேரை எரிச்சவங்க….அவங்க யார் எண்டு தெரியாது. கிpட்டப் போக முடியேல்லை. சாக்கெல்லாம் உருண்டு துள்ளி…கத்தி…எல்லாம் ஓஞ்சு கடைசில அப்படியே ஒரு துடிப்பும் இல்லாம எரிஞ்சிச்சு. அதை அப்படியே பாத்தம். அப்பா எரியக்குள்ளை அதைப் பாக்க மட்டும் தான் எங்களுக்கு முடிஞ்சுது. ஆமிட்ட போய் எங்கட அப்பாவை உயிரோட எரிச்சது எண்டு சொல்லி கத்தினம். ஆனா அவன் ~~உங்கட அப்பாவை நாங்க பிடிக்கவே இல்ல எண்டு சொல்லிட்டான்.
கடைசியாக அப்பாட மரண ~சேட்டிபிக்கற் ~~இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் எண்டு தான் தந்தவங்க. நாங்க சொன்னம்…~~ ஆமி தான் அப்பாவைக் கொண்டவங்க..அதை நாங்க பாத்தம்.. எண்டு. அப்பிடிச் சொன்னா நட்ட ஈடு கிடைக்காது…அப்பிடிச் சொல்லக்கூடாது எண்டு பொலிஸ்காரன் சொன்னவன்!
அதுக்குப் பிறகு எங்கட குடும்பம் கஸ்டம்! ஆதாரமான அப்பா இல்லாததால வந்த கஸ்டம்! எல்லாத்தாலும் ~இனந்தெரியாதவர்களால் சுடப்பட்டார் எண்டு ~சைன் வச்சித்தான் நட்டஈடு எடுத்தம். இது 87ம் ஆண்டு 5ம் மாதம் 27ம் திகதி நடந்தது. இந்தக் காலத்தில இப்படித்தான் நிறையப் பேருக்கு மரண ~சேட்டிபிக்கற் குடுத்தவங்க.
இதுக்குப் பிறகு..கிழிஞ்ச வெள்ளைச் சட்டையும், முருங்கைக் கீரையும் சோறும் தான் எங்களை வளத்தது!!
………………………
(குறிப்பு:- இவ் உண்மைச் சம்பவத்தை நேரில் கேட்டறிந்தவர்:- கதைவிளம்பி. நன்றி:- எரிமலை.)
ஈழ மண்ணில் நிகழ்ந்து விட்டிருக்கும் ஆயிரமாயிரம் கொடூர சம்பவங்களில் என் நெஞ்சை உருக்கிய இன்னுமொரு சம்பவம் இது!
தொகுப்பு:-
சந்திரா. ரவீந்திரன்-------------------------------
நானுன்னை இனி எங்கு தேடுவேன்?
ஜனங்களின் மனங்களைப் போல!
பனிக்காற்று உடலைத் துளைத்தது
கூரிய ஊசிகளைப் போல!
மேகம் நிலவுக்கு விடை கொடுத்து
மூளியாய் இருண்டு கிடந்தது!
வலது கண் அடிக்கடி துடித்தது!
கனவுகள் திரைகளாய்
து}க்கத்தை மறைத்தது!
இதயம் தாய் மண்ணை
நினைத்து தவித்தது!
நாழிகள் மரத்தனமாய்
ஓட மறுத்தது!
மின்னல் கோடிட்டு
இடியொன்று முழங்கியது!
கம்பிகளுடாய் சேதிகள் வந்தது
களத்தில் அவன் காவியமானான் என்று!!!
கடலும் காற்றும் பனியும் மேகமும்
நிலவும் உலக ஒலிகளும்
எங்கோவொரு அந்தத்தில்
அடைந்து போயின!
ஸ்தம்பித்த பூமியில், ஜில்லிட்ட குருதியில்
சபா.......! என்ற கூவலின் நீண்ட கேவல்!
மௌனத்தின் விறைப்பில், ஏமாந்த கோபத்தில்
மயூரன்...... என்ற வினோதமான விக்கல்!
என் இனிய உடன் பிறப்பே!
ஆசைத் தம்பியே!
ஆழகிய அந்த ஈழ பூமியில்
நீயெங்கே உறைந்து கொண்டாய்!
கடல் கடந்து வான் பறந்து
மலை தாண்டி மண் குதித்து
படை மீறி வந்தாலும்
நானுன்னை இனி எங்கு தேடுவேன்!
தம்பி! நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்!
கொடிய பசியுடன்
கூடவே தோழருமாய்
திடுமென்று என் வாசலை
தட்டிய போதெல்லாம்
நானிட்ட சாதமும் சாதாரண குழம்பும்
ருசியென்று உண்பாயே!
ஒரு கையில் சுமையேந்தி
மறுகையால் உதவிசெய்வாய்!
பிறர் கஷ்டம் பொறுக்காத
து}யவனே! மயூரா!
நானுன்னை இனி எங்கு தேடுவேன்?
நானுன்னை இனி எப்படித் தழுவுவேன்?
சந்திரா ரவீந்திரன்
லண்டன்
- 1.11.93 இல் பூநகரித் தாக்குதலில் வீரமரணமடைந்த என் அன்புத் தம்பி சபா (மயூரன்) வுக்காக -
நன்றி - எரிமலை (பிரசுரம் - ஆடி 1994 எரிம



